Breaking News

உரிமம் பெறாமல் நாய்கள் வீடுகளில் வளர்ப்பது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை..



உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறைபடுத்துவதற்கு மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் பிரதி புதன்கிழமை தோறும் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 109 வளர்ப்பு நாய்களுக்கு வெறி நாய்கடி தடுப்பூசி இலவசமாக செலுத்தி, பொது பரி சோதனை செய்து புதிய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உரிமத்துக்கு நாய் ஒன்றுக்கு ரூ.150 மற்றும் புதுப்பித்தலுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு உரிமம் பெறாமல் நாய்கள் வீடுகளில் வளர்ப்பது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.மேலும் வியாபார நோக்கம் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை நாய்கள் நோய் வாய்ப்பட்டு, வயது முதிர்ந்த பின்பு சரியான முறையில் பராமரிக்காமல் பொது இடங்களில் கைவிடப்படுவதாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி இது குற்றமாகும்.

எனவே வியாபார நோக்கம் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் வெளி நாட்டு வகை நாய்களின் உரிமையாளர்கள் அவை வயது முதிர்வு, நோய் வாய்பட்டால் அவற்றை கைவிடாமல் உடனடியாக கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையுடன் சிகிச்சை அளித்து முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!